இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானின் மாபெரும் சாதனையை தகர்த்த இலங்கை
|இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர்கள் மொத்தம் 27 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
கொழும்பு,
இலங்கை - இந்தியா இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் முதல் போட்டி சமனில் முடிவடைந்த நிலையில், கடைசி 2 போட்டிகளிலும் இலங்கை வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்த தொடர் முழுவதும் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் இலங்கை சுழலில் சிக்கி கொத்து கொத்தாக விக்கெட்டுகளை இழந்தனர். அந்த வகையில் 3 போட்டிகளிலும் சேர்த்து இலங்கை சுழற்பந்து வீச்சாளர்கள் மொத்தமாக 27 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.
இதன் மூலம் இந்தியாவுக்கு எதிரான இரு தரப்பு தொடர்களில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய சுழற்பந்து வீச்சாளர்களின் மாபெரும் சாதனை பட்டியலில் பாகிஸ்தான் அணியை பின்னுக்கு தள்ளி இலங்கை முதலிடத்தை பிடித்துள்ளது.
அந்த பட்டியல்:-
1. இலங்கை - 27 விக்கெட்டுகள்
2. பாகிஸ்தான் - 22 விக்கெட்டுகள்
3. பாகிஸ்தான் - 21 விக்கெட்டுகள்