< Back
கிரிக்கெட்
ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா மோதும் 20 ஓவர் கிரிக்கெட்
கிரிக்கெட்

ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா மோதும் 20 ஓவர் கிரிக்கெட்

தினத்தந்தி
|
30 Aug 2023 1:10 AM IST

ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா மோதும் 20 ஓவர் கிரிக்கெட் இன்று நடக்கிறது

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது.

இதன்படி தென்ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி டர்பனில் இன்று நடக்கிறது. ஆஸ்திரேலிய அணி ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் தலைமையில் களம் காணுகிறது. அந்த அணியில் காயத்தால் ஸ்டீவன் சுமித், கம்மின்ஸ், ஸ்டார்க் இடம் பெறவில்லை. ஆல்-ரவுண்டர் மேக்ஸ்வெல்லும் கணுக்கால் காயத்தால் கடைசி நேரத்தில் பின்வாங்கி விட்டார். டேவிட் வார்னர், கேமரூன் கிரீன், ஹேசில்வுட் உள்ளிட்டோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்பென்சர் ஜான்சன், ஆரோன் ஹார்டி, மேத் ஷார்ட் போன்ற வீரர்கள் முதல்முறையாக சர்வதேச போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளனர். மார்கஸ் ஸ்டோனிஸ், டிராவிஸ் ஹெட், டிம் டேவிட் பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

மார்க்ரம் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணியில் வான்டெர் டஸன், பவுமா, ரீஜா ஹென்ரிக்ஸ், பிரேவிஸ், இங்கிடி, ஷம்சி, மார்கோ யான்சன் என்று திறமையான வீரர்கள் அணிவகுப்பதால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்2 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

மேலும் செய்திகள்