தென் ஆப்பிரிக்கா டி20 லீக்; எம்.ஐ. கேப்டவுன் அணியின் கேப்டனாக பொல்லார்ட் நியமனம்...!
|இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் டி20 தொடர் போன்று தென் ஆப்பிரிக்காவிலும் டி20 தொடர் 'எஸ்ஏ20 லீக்' என்ற பெயரில் நடைபெற்று வருகிறது.
கேப்டவுன்,
இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் டி20 தொடர் போன்று தென் ஆப்பிரிக்காவிலும் டி20 தொடர் 'எஸ்ஏ20 லீக்' என்ற பெயரில் நடைபெற்று வருகிறது. அதில் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களே அணிகளை ஒப்பந்தம் செய்துள்ளனர். அதன்படி ஜோபர்க் சூப்பர் கிங்ஸ், டர்பன்ஸ் சூப்பர் ஜெயன்ட்ஸ், பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ், எம்ஐ கேப்டவுன், பார்ல் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன. இதன் முதலாவது சீசன் கடந்த ஆண்டு முடிவடைந்தது. அதில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் கோப்பையை வென்றது.
இந்த தொடரின் 2-வது சீசன் வரும் 10ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 10ஆம் தேதி முடிவடைய உள்ளது. 6 நகரங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன. இதன் முதலாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் ஜோபர்க் சூப்பர்கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.
இந்நிலையில் கடந்த சீசனில் எம்.ஐ. கேப்டவுன் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரஷித் கான் காயம் காரணமாக நடப்பு தொடரில் இருந்து விலகி உள்ளார். இதன் காரணமாக எம்.ஐ. கேப்டவுன் அணியின் புதிய கேப்டனாக பொல்லார்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.