< Back
கிரிக்கெட்
5-வது டி20 போட்டி: டாஸ் வென்றது தென் ஆப்பிரிக்கா, இந்தியா முதலில் பேட்டிங்

Photo Credit: BCCI Twitter

கிரிக்கெட்

5-வது டி20 போட்டி: டாஸ் வென்றது தென் ஆப்பிரிக்கா, இந்தியா முதலில் பேட்டிங்

தினத்தந்தி
|
19 Jun 2022 6:55 PM IST

தொடர் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

பெங்களூரு,

இந்தியாவுக்கு வந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரு ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்காவும், அடுத்த இரு ஆட்டங்களில் இந்தியாவும் வெற்றி பெற்றதால் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையை அடைந்துள்ளது.

இந்த நிலையில் தொடர் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதன்படி இந்திய அணி பேட்டிங் செய்கிறது.

கேப்டன் பவுமா கடந்த ஆட்டத்தில் ரன்-அவுட்டில் இருந்து தப்பிக்க பாய்ந்து விழுந்ததில் முழங்கையில் காயமடைந்து பாதியில் வெளியேறினார். அவர் உடல்தகுதியை எட்டாததால் சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜ் அணியை வழிநடத்துகிறார். தென்ஆப்பிரிக்க அணி வெற்றியுடன் தாயகம் திரும்பும் வேட்கையுடன் உள்ளது. இந்திய வீரர்கள் உள்ளூரில் தொடரை இழந்து விடக்கூடாது என்பதில் தீவிரமாக உள்ளனர். எனவே இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.

மேலும் செய்திகள்