< Back
கிரிக்கெட்
பிசிசிஐ தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறாரா கங்குலி?
கிரிக்கெட்

பிசிசிஐ தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறாரா கங்குலி?

தினத்தந்தி
|
1 Jun 2022 12:35 PM GMT

பிசிசிஐ தலைவர் பொறுப்பில் இருந்து கங்குலி ராஜினாமா செய்ய உள்ளதாக பரவலாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

கொல்கத்தா,

பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து கங்குலி ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிசிசிஐ தலைவராக இருந்து வரும் கங்குலி தனது டுவிட்டர் பதிவில், 30 ஆண்டுகள் கிரிக்கெட் பயணத்தை நிறைவு செய்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த பயணத்தில் உடன் இருந்த ஒவ்வொரு நபருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் பலருக்கும் உதவும் வகையில் ஒன்றை தொடங்க திட்டமிட்டு இருப்பதாகவும், இந்த புதிய அத்தியாத்திற்கும் அனைவரும் ஆதரவு இருக்கும் என நம்புவதாக பதிவிட்டுள்ளார்.

சவுரவ் கங்குலியின் இந்த பதிவால் அவர் பிசிசிஐ தலைவர் பொறுப்பில் இருந்து விலகக் கூடும் என்று பரவலாக பேசப்பட்டது. ஆனால், கங்குலி பிசிசிஐ தலைவர் பொறுப்பில் இருந்து விலக மாட்டார் என்று பிசிசிஐ செயலர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்