< Back
கிரிக்கெட்
இரும்பு தொழிற்சாலை தொடங்கும் சவுரவ் கங்குலி
கிரிக்கெட்

இரும்பு தொழிற்சாலை தொடங்கும் சவுரவ் கங்குலி

தினத்தந்தி
|
16 Sept 2023 1:21 PM IST

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இரும்பு தொழிற்சாலை தொடங்க உள்ளார்.

கொல்கத்தா,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவருமானவர் சவுரவ் கங்குலி.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சவுரவ் கங்குலி தொழில் தொடங்கும் முனைப்பில் உள்ளார். அவர் மேற்குவங்காளத்தின் மெதினிபூரில் விரைவில் இரும்பு தொழிற்சாலை தொடங்க உள்ளார்.

மேற்குவங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவியுமான மம்தா பானர்ஜி 12 நாள் பயணமாக ஸ்பெயின் மற்றும் துபாய்க்கு சென்றுள்ளார். அரசு முறை பயணமாக மம்தா பானர்ஜியும் அரசின் முக்கிய அதிகாரிகளும் சென்றுள்ளனர். அதேவேளை மம்தா பானர்ஜியுடன் சவுரவ் கங்குலியும் சென்றுள்ளார். மேற்குவங்காளத்தில் முதலீடு செய்ய வருமாறு ஸ்பெயின், துபாயில் உள்ள முதலீட்டாளர்களுக்கு மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில், ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடந்த வங்காள-உலக தொழில் கூட்டத்தில் பங்கேற்ற சவுரவ் கங்குலி கூறுகையில், நாங்கள் மேற்குவங்காளத்தில் 3வது இரும்பு தொழிற்சாலை அமைக்கும் பணியை தொடங்கியுள்ள இந்த நேரத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நான் கிரிக்கெட் மட்டும் தான் விளையாடுவேன் என பலர் நினைக்கின்றனர். நாங்கள் 2007ம் ஆண்டே சிறிய அளவில் இரும்பு தொழிற்சாலை தொடங்கிவிட்டோம். இன்னும் 6 மாதத்திற்குள் நாங்கள் மெதினிபூரில் புதிய இரும்பு தொழிற்சாலை தொடங்க உள்ளோம்' என்றார்.

மேலும் செய்திகள்