< Back
கிரிக்கெட்
ஐபிஎல்லில் மகன் முதல் விக்கெட்...சச்சின் டெண்டுல்கர் வெளியிட்ட டுவிட்டர் பதிவு...!

Image Courtesy: @sachin_rt

கிரிக்கெட்

ஐபிஎல்லில் மகன் முதல் விக்கெட்...சச்சின் டெண்டுல்கர் வெளியிட்ட டுவிட்டர் பதிவு...!

தினத்தந்தி
|
19 April 2023 4:05 PM IST

ஐபிஎல் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணி ஐதராபாத்தை வீழ்த்தி தனது 3வது வெற்றியை பதிவு செய்தது.

ஐதராபாத்,

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி தனது 3வது வெற்றியை பதிவு செய்தது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி கேமரூன் க்ரீனின் அதிரடி அரைசதம் மற்றும் திலக் வர்மா, இஷன் கிஷானின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஐதராபாத் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வண்ணம் இருந்தது. அந்த அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் 2 விக்கெட்டுகள் மட்டுமே இருந்தன.

மும்பை அணிக்காக கடைசி ஓவரை சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் வீசினார். இந்த ஓவரில் ஒரு ரன் அவுட் மற்றும் கேட்ச் விக்கெட் உட்பட 2 விக்கெட்டுகளையும் இழந்து ஐதராபாத் அணி 178 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் மும்பை அணி 14 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இறுதி ஓவரை அபாரமாக வீசிய அர்ஜூனையும் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியையும் பாராட்டி சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

மும்பை அணி மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கேமரூன் க்ரீன் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு அனைவரின் கவனத்தையும் பெற்றார்.

இஷன் மற்றும் திலக் வர்மாவின் பேட்டிங் சிறப்பாக இருந்தது. நாளுக்கு நாள் ஐபிஎல் போட்டி சுவாரஸ்யமாகி வருகிறது.

இறுதியாக டெண்டுல்கருக்கு ஒரு ஐபிஎல் விக்கெட்..!

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.




மேலும் செய்திகள்