< Back
கிரிக்கெட்
சமூக வலைதளங்கள் மூலம் இவ்வளவு வருமானமா...? விராட் கோலி பதில்
கிரிக்கெட்

சமூக வலைதளங்கள் மூலம் இவ்வளவு வருமானமா...? விராட் கோலி பதில்

தினத்தந்தி
|
13 Aug 2023 12:54 AM IST

வாழ்க்கையில் நான் பெற்ற அனைத்திற்கும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, தனது ஒரு இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் 11 கோடியே 45 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டுவதாகவும், சர்வதேச அளவில் சமூக வலைதள பதிவுகள் மூலம் வருமானம் ஈட்டும் நபர்களில் விராட் கோலி முன்னிலையில் இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

இந்நிலையில் இந்த தகவலை விராட் கோலி மறுத்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "வாழ்க்கையில் நான் பெற்ற அனைத்திற்கும் நன்றியுள்ளவனாகவும், கடமைப்பட்டவனாகவும் இருக்கிறேன். அதே வேளையில், எனது சமூக ஊடக வருமானம் குறித்து பரவி வரும் செய்திகள் உண்மையல்ல" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்