< Back
கிரிக்கெட்
லக்னோவில் மிட்செல் ஜான்சனின் ஓட்டல் அறைக்குள் நுழைந்த பாம்பு- வைரலாகும் ஜான்சனின் சுவாரசிய பதிவு

Image Courtesy: AFP/ Instagram mitchjohnson398

கிரிக்கெட்

லக்னோவில் மிட்செல் ஜான்சனின் ஓட்டல் அறைக்குள் நுழைந்த பாம்பு- வைரலாகும் ஜான்சனின் சுவாரசிய பதிவு

தினத்தந்தி
|
19 Sept 2022 7:53 PM IST

லக்னோவில் ஜான்சன் தங்கி இருக்கும் ஓட்டல் அறைக்குள் பாம்பு நுழைந்து அவருக்கு அதிர்ச்சி அளித்து இருக்கிறது.

லக்னோ,

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் விளையாடும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி தற்போது இந்தியாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் இந்தியா வந்துள்ளார்.

அவர் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜாக் காலிஸ் தலைமையிலான இந்தியா கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இதற்காக தற்போது அவர் லக்னோவில் உள்ள தனியார் ஓட்டல் அறையில் தங்கி இருக்கிறார்.

இந்த நிலையில் லக்னோவில் ஜான்சன் தங்கி இருக்கும் அறைக்குள் பாம்பு ஒன்று நுழைந்து அவருக்கு அதிர்ச்சி அளித்து இருக்கிறது. தனது அறைக்குள் நுழைந்த பாம்பின் புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

பாம்பின் புகைப்படத்தை பகிர்ந்து ஜான்சன் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "யாருக்காவது இது என்ன வகை பாம்பு என்று தெரியுமா? என் அறை வாசலில் இந்த பாம்பு இருந்தது" என பதிவிட்டுள்ளார்.


இந்த பதிவை வெளியிட்ட சில மணி நேரம் கழித்து மீண்டும் அதை பாம்பு வேறு கோணத்தில் இருக்கும் புகைப்படத்தை ஜான்சன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். அந்த பதிவில், "இந்த பாம்பின் உடைய தலை பகுதியின் சிறந்த படம் கிடைத்தது. அது என்ன வகை பாம்பு என்று இன்னும் தெரியவில்லை. தற்போது வரை லக்னோவில் தங்கியிருப்பது சுவாரஸ்யமாக உள்ளது" என பதிவிட்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள இந்த சுவாரசிய பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


மேலும் செய்திகள்