எதிரணி வீராங்கனைகளுடன் பேட்டிங் அனுபவத்தை பகிர்ந்து கொண்ட ஸ்மிரிதி மந்தனா- வீடியோ
|இன்று தாய்லாந்தை எதிர்கொண்டு ஆடிய இந்திய அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சில்கட்,
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் நடந்துவருகிறது. ஆசிய கோப்பையில் இந்திய மகளிர் அணி அபாரமாக விளையாடி வெற்றிகளை குவித்து வருகிறது. பாகிஸ்தானிடம் மட்டும் ஒரேயொரு தோல்வியை அடைந்த இந்திய அணி குரூப் சுற்றில் மற்ற அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
சில்கட்டில் இன்று நடந்த போட்டியில் தாய்லாந்தை எதிர்கொண்டு ஆடிய இந்திய அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தாய்லாந்து அணி 15.1 ஓவரில் வெறும் 37 ரன்களுக்கு தாய்லாந்து அணி ஆல் அவுட்டானது.
பின்னர் எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 6 ஓவர்களில் 1 விக்கெட்களை மட்டுமே 40 ரன்கள் அடித்து 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இன்று போட்டி முடிந்த பிறகு இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா, தாய்லாந்து வீராங்கனைகளுடன் தனது பேட்டிங் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். இன்றைய போட்டியில் இந்திய அணியை வழிநடத்திய மந்தனா சக வீராங்கனை ஜெமிமாவுடன் இணைந்து தாய்லாந்து வீராங்கனைகளுக்கு பேட்டிங் நுணுக்கங்கள் பற்றி எடுத்து உரைத்தார்.
எதிரணி வீரர்களாக இருந்தாலும் அவர்களுடன் அனுபவத்தை பகிர்ந்து கொண்ட மந்தனாவின் செயலை சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.