< Back
கிரிக்கெட்
சண்டிமால் அபார சதம் : முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றது இலங்கை அணி..!!

Image Tweeted By @OfficialSLC

கிரிக்கெட்

சண்டிமால் அபார சதம் : முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றது இலங்கை அணி..!!

தினத்தந்தி
|
10 July 2022 6:09 PM IST

ஆஸ்திரேலிய அணியை விட இலங்கை அணி 67 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

காலே,

ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியில் லபுசேன், ஸ்மித் இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினர் .லபுசேன் சிறப்பாக ஆடி சதமடித்து 104 ரன்னில் ஆட்டமிழந்தார். அதை தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித் சதமடித்து அசத்தினார். இறுதியில் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 364 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது

தொடர்ந்து இலங்கை அணி முதல் இன்னிங்சை ஆட தொடங்கியது. 2வது நாள் ஆட்ட நேர அந்த அணி முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. குசால் மெண்டிஸ் 84 ரன்களும் ,மேத்யூஸ் 6 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. மெண்டிஸ் 85 ரன்களில் ஆட்டமிழந்தார். மேத்யூஸ் அரைசதம் கடந்த நிலையில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இலங்கை அணி தரப்பில் சிறப்பாக விளையாடிய சண்டிமால் சதம் அடித்து அசத்தினார். இறுதியில் 3-வது நாள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 431 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணியை விட இலங்கை அணி 67 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

சண்டிமால் 118 ரன்களுடனும் ரமேஷ் மெண்டிஸ் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நாளை 4-வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்