டிஎன்பிஎல்: சேப்பாக்கிற்கு 142 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மதுரை
|மதுரை பாந்தர்ஸ் 7 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்துள்ளது.
சேலம்,
நடப்பு டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 18வது லீக் ஆட்டம் இன்று சேலத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.
இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து மதுரை அணி முதலில் பேட்டிங் செய்தது. சேப்பாக் அணியின் சிறப்பான பந்து வீச்சாள் மதுரை அணியின் முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மதுரை 9.4 ஓவரில் 50 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்து தடுமாறியது. பின்னர் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் 30 பந்துகளில் 56 ரன்கள் குவித்தார். இறுதியில் மதுரை 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்தது. சேப்பாக் அணியின் அபுரஜித், சிலம்பரசன் அதிகபட்சமாக தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சேப்பாக் 8 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் எடுத்துள்ளது.