< Back
கிரிக்கெட்
அந்த தமிழக வீரர் என்னை ஆச்சரியப்படுத்தி விட்டார் - லக்னோ அணியின் பயிற்சியாளர்

image courtesy:AFP

கிரிக்கெட்

அந்த தமிழக வீரர் என்னை ஆச்சரியப்படுத்தி விட்டார் - லக்னோ அணியின் பயிற்சியாளர்

தினத்தந்தி
|
21 March 2024 10:53 AM IST

ஜஸ்டின் லாங்கர் லக்னோவில் இணைந்த பின்னர் தங்களது அணியின் செயல்பாடு குறித்து சில கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

லக்னோ,

17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நாளை கண்கவர் கலை நிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்குகிறது. நாளை இரவு 8 மணிக்கு நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும், பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் மோதுகின்றன.

இந்நிலையில் கடந்த 2022-ஆம் ஆண்டு அறிமுகமான லக்னோ அணி ஐ.பி.எல் தொடரில் மிகச் சிறப்பான வெளிப்படுத்தி வெளிப்படுத்து வரும் வேளையில் அந்த அணியின் முக்கிய ஆலோசகரான கவுதம் கம்பீர் லக்னோவிலிருந்து விலகி கொல்கத்தா அணிக்கு சென்றுள்ளதால் லக்னோ அணியின் நிர்வாகம் ஏமாற்றம் அடைந்துள்ளதாக பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் அறிமுகமான இரண்டு சீசன்களிலும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய லக்னோ அணி தற்போது கம்பீர் இல்லாத நிலையில் வேறொரு முக்கிய நிர்வாகியையும் நியமித்துள்ளது. கவுதம் கம்பீர் கொல்கத்தா அணிக்கு சென்றதால் வேறொரு ஆலோசகரை தேர்வு செய்த லக்னோ அணியானது தற்போது இளம் வீரர்களை வைத்து பயிற்சியையும் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் ஜஸ்டின் லாங்கர் லக்னோவில் இணைந்த பின்னர் தங்களது அணியின் செயல்பாடு குறித்தும் சில கருத்துகளை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். அந்த வகையில் லாங்கர் கூறுகையில் :

'எனக்கும் கவுதம் கம்பீருக்கும் இடையே எந்த மோதலும் கிடையாது. கே.கே.ஆர். அணிக்கு கவுதம் கம்பீர் சென்றது எனக்கு ஏமாற்றம்தான். கே.கே.ஆர். அணியின் ஹீரோக்களில் கவுதம் கம்பீர் முதன்மையானவர். நாங்கள் எப்போதுமே சிறந்த நண்பர்கள்தான்.

ஐ.பி.எல். தொடரில் எனக்கு ஏராளமான நண்பர்கள் உள்ளனர். டெல்லி அணிக்கு பயிற்சியாளராக இருக்கும் ரிக்கி பாண்டிங், சி.எஸ்.கே. அணி பயிற்சியாளராக செயல்படும் பிளமிங், ஹசி ஆகியோரும் எனக்கு நண்பர்கள்தான். எனவே அவர்களுக்கும் எனக்கும் எந்த போட்டியும் கிடையாது. லக்னோ அணியில் ஏராளமான சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக ஸ்பின்னர்கள் என்னை மிகவும் அசர வைத்து விட்டார்கள். அந்த வகையில் தமிழக வீரர் சித்தார்த் பயிற்சி ஆட்டத்தில் மெய்டன் ஓவர் வீசியது மட்டும் இல்லாமல் என்னை ஆச்சரியப்படுத்தி விட்டார்' என்று கூறினார்.

மேலும் செய்திகள்