< Back
கிரிக்கெட்
டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் நம்பிக்கைக்கு முக்கியமான வீரர் ஸ்ரேயஸ் ஐயர்- முகமது கைப்
கிரிக்கெட்

டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் நம்பிக்கைக்கு முக்கியமான வீரர் ஸ்ரேயஸ் ஐயர்- முகமது கைப்

தினத்தந்தி
|
26 Dec 2022 12:33 AM IST

வங்காளதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர் ஸ்ரேயஸ் ஐயர் ஆவார்.

புதுடெல்லி,

மிர்பூரில் நடைபெற்ற வங்காளதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இதில் 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர் ஸ்ரேயஸ் ஐயர் ஆவார். போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறிய நிலையில், பண்ட்டுடன் ஜோடி சேர்ந்த ஐயர், 87 ரன்கள் எடுத்தார்.

பின்னர் 2வது இன்னிஸ்சில் முக்கிய தருணத்தில் அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 29 ரன்கள் எடுத்தார். ஸ்ரேயஸ் ஐயரின் பார்ம் குறித்து இந்தியாவின் முன்னாள் வீரர் முகமது கைப் கூறுகையில்,

இந்தியாவின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில்நம்பிக்கைக்கு ஷ்ரேயாஸ் ஐயர் மிகவும் முக்கியமானவர். நான்காவது நாள் ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்கள் சாதகமாக இருந்தாலும், ஸ்ரேயஸ் தனது திறமையை வெளிப்படுத்தினார்.

அடுத்த ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடக்கும் தொடருக்கு இது அவரது பார்ம் முக்கியமானதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஐயர், 8 இன்னிங்ஸ்களில் 60.28 சராசரியில் நான்கு அரை சதங்களுடன் 422 ரன்கள் எடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்