< Back
கிரிக்கெட்
ஸ்ரேயாஸ் அய்யர் இந்திய அணியுடன் இணைகிறார்..!
கிரிக்கெட்

ஸ்ரேயாஸ் அய்யர் இந்திய அணியுடன் இணைகிறார்..!

தினத்தந்தி
|
15 Feb 2023 4:25 AM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் ஸ்ரேயாஸ் அய்யர் இடம் பிடித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி இந்த மாதம் 17-ம் தேதி டெல்லியில் தொடங்க உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் வரிசை பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் அய்யர், முதுகுவலி பிரச்சினை காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் விலகினார். அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் களம் இறங்கினார்.

பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று காயத்தில் இருந்து மீள்வதற்கான சிகிச்சை மற்றும் பயிற்சி முறைகளை மேற்கொண்ட ஸ்ரேயாஸ் தற்போது முழுமையாக குணமடைந்து உடல்தகுதியை எட்டி விட்டதாக கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவ கமிட்டி சான்றிதழ் அளித்துள்ளது. இதையடுத்து அவர் டெல்லியில் 17-ந்தேதி தொடங்கும் 2-வது டெஸ்டுக்கு முன்பாக இந்திய அணியுடன் இணைவார் என்று கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்