< Back
கிரிக்கெட்
இந்திய ஜெர்சியை ரசிகைக்கு பரிசாக அளித்த ஸ்ரேயாஸ் ஐயர்!
கிரிக்கெட்

இந்திய ஜெர்சியை ரசிகைக்கு பரிசாக அளித்த ஸ்ரேயாஸ் ஐயர்!

தினத்தந்தி
|
15 Jan 2024 4:50 PM IST

89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

சவுராஷ்டிரா,

89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.

இதில் நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் மும்பை - ஆந்திரா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் மும்பை அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெஸ்ட் போட்டிகளுக்கு பயிற்சி மேற்கொள்ளும் வகையில் இந்த சீசனில் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்நிலையில் மும்பை - ஆந்திரா இடையேயான போட்டியின்போது ஸ்ரேயாஸ் ஐயர், தனது பெயர் பதித்த இந்திய அணியின் ஜெர்சியை ரசிகைக்கு பரிசாக அளித்துள்ளார்

மேலும் செய்திகள்