< Back
கிரிக்கெட்
ஐ.பி.எல்; தோனி, ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்த ஸ்ரேயாஸ் ஐயர்
கிரிக்கெட்

ஐ.பி.எல்; தோனி, ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்த ஸ்ரேயாஸ் ஐயர்

தினத்தந்தி
|
22 May 2024 10:11 AM GMT

ஐதராபாத்திற்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் 58 ரன்கள் அடித்தார்.

அகமதாபாத்,

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற முதலாவது தகுதிசுற்று ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டம் அகமதாபாத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி கொல்கத்தாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ஐதராபாத் அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 159 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஐதராபாத் தரப்பில் ராகுல் திரிபாதி 55 ரன் எடுத்தார். கொல்கத்தா தரப்பில் ஸ்டார்க் 3 விக்கெட், சக்கரவர்த்தி 2 விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து 160 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய கொல்கத்தா அணி 13.4 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 164 ரன் எடுத்து அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. கொல்கத்தா தரப்பில் ஸ்ரேயாஸ் ஐயர் 58 ரன், வெங்கடேஷ் ஐயர் 51 ரன் எடுத்தனர்.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் அடித்ததன் மூலம் தோனி, ரோகித் சர்மா, டேவிட் வார்னர் ஆகியோரின் சாதனை ஒன்றை சமன் செய்துள்ளார். அதாவது, ஐ.பி.எல் தொடரின் பிளே ஆப் சுற்றில் கேப்டனாக அதிக அரைசதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் தோனி, ரோகித் சர்மா, டேவிட் வார்னர் ஆகியோரின் சாதனையை ஸ்ரேயாஸ் சமன் செய்துள்ளார்.

ஐ.பி.எல் தொடரின் பிளே ஆப் சுற்றில் கேப்டனாக அதிக அரைசதங்கள் அடித்தவர்கள் பட்டியல்;

தோனி - 2

ரோகித் - 2

வார்னர் - 2

ஸ்ரேயாஸ் - 2

மேலும் செய்திகள்