< Back
கிரிக்கெட்
பஞ்சாப் கிங்சில் தோனி இடம்பெற வேண்டும் - ரசிகரின் வேண்டுகோளுக்கு பிரீத்தி ஜிந்தாவின் பதில் என்ன?

image courtesy: AFP

கிரிக்கெட்

பஞ்சாப் கிங்சில் தோனி இடம்பெற வேண்டும் - ரசிகரின் வேண்டுகோளுக்கு பிரீத்தி ஜிந்தாவின் பதில் என்ன?

தினத்தந்தி
|
6 May 2024 5:57 PM IST

பஞ்சாப் கிங்ஸ் அணியில் எம்.எஸ். தோனி இடம்பெற வேண்டும் என்று அதன் உரிமையாளரான பிரீத்தி ஜிந்தாவிடன் ரசிகர் ஒருவர் வேண்டுகோள் விடுத்தார்.

தர்மசாலா,

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி சென்னை வெற்றி பெற்றது.

இந்த போட்டி நிறைவடைந்ததையடுத்து பஞ்சாப் அணியின் உரிமையாளரான பிரீத்தி ஜிந்தாவிடம் ரசிகர் ஒருவர், ' பஞ்சாப் கிங்ஸ் அணியில் எம்.எஸ். தோனி இடம்பெறுவதை நாங்கள் பார்க்க விரும்புகிறோம்' என்று எக்ஸ் வலைதளம் மூலம் வேண்டுகோள் விடுத்தார்.

அதற்கு பதிலளித்த பிரீத்தி ஜிந்தா, 'அனைத்து அணிகளும் தோனியை எடுக்க நினைக்கும், நான் உட்பட அனைவரும் தோனியின் ரசிகர்கள். நேற்றைய போட்டியில் பஞ்சாப் வெற்றி பெற வேண்டும் எனவும் தோனி பெரிய சிக்சர்கள் அடிக்க வேண்டும் எனவும் நான் விரும்பினேன். ஆனால் இரண்டும் நடக்கவில்லை. நாங்கள் தோற்றோம், அவர் அவுட்டானார். எங்கள் பந்துவீச்சாளர்கள் அவர்களை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் இறுதியில் அது போதுமானதாக இல்லை' என்று பதிலளித்துள்ளார்.

மேலும் செய்திகள்