< Back
கிரிக்கெட்
வங்காளதேச அணிக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஷிவம் துபே விலகல்
கிரிக்கெட்

வங்காளதேச அணிக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஷிவம் துபே விலகல்

Muthu Manikannan S
|
5 Oct 2024 10:08 PM IST

இந்திய வீரர் ஷிவம் துபே காயம் காரணமாக விலகி உள்ளார்

புதுடெல்லி,

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 டெஸ்ட் கொண்ட தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்தியா-வங்காளதேசம் இடையேயான 3 போட்டி கொண்ட டி20 தொடரில் முதல் ஆட்டம் மத்தியபிரதேச மாநிலம் குவாலியரில் நாளை ( 6-ந் தேதி) நடக்கிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி டி20 தொடரையும் வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், வங்காளதேசத்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இந்திய வீரர் ஷிவம் துபே காயம் காரணமாக விலகி உள்ளார். அவருக்கு பதிலாக திலக் வர்மா இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி: சூர்யகுமார் யாதவ், அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் , ரின்கு சிங், ஹர்திக் பாண்டியா, ரியான் பராக், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், வருண் சக்கரவர்த்தி, ஜித்தேஷ் சர்மா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, மயங்க் யாதவ், திலக் வர்மா.

மேலும் செய்திகள்