< Back
கிரிக்கெட்
டி20 உலக கோப்பைக்கான அணியில் ஷிகர் தவானுக்கு இடமில்லை- சுனில் கவாஸ்கர்

கோப்புப்படம் 

கிரிக்கெட்

டி20 உலக கோப்பைக்கான அணியில் ஷிகர் தவானுக்கு இடமில்லை- சுனில் கவாஸ்கர்

தினத்தந்தி
|
21 Jun 2022 8:42 AM IST

ஷிகர் தவான் இந்திய அணியில் இடம்பெற வாய்ப்பில்லை என முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற பல வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள், மிடில் ஆர்டர் பேட்டிங், ஸ்பின் காம்பினேஷன், வேகப் பந்துவீச்சு என அனைத்தும் உறுதியாகிவிட்டது.

சூர்யகுமார் யாதவ் மற்றும் ஷ்ரேயஸ் அய்யர் ஆகியோரிடையே 4ம் வரிசை பேட்டிங்கிற்கான போட்டி நிலவுகிறது. மேலும், ரிஷப் பண்ட் தொடர்ந்து சொதப்பிவரும் வேளையில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக ஆடிவருவதால் விக்கெட் கீப்பர் யார் என்பதும் கேள்வியாக உள்ளது.

இந்த நிலையில், தொடக்க வீரரான ஷிகர் தவானுக்கு டி20 உலக கோப்பைக்கான அணியில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை என முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்தார். இதுதொடர்பாக பேசிய சுனில் கவாஸ்கர், ஷிகர் தவான் இந்திய அணியில் இடம்பெற வாய்ப்பில்லை. டி20 உலக கோப்பைக்கான அணியில் ஷிகர் தவானை எடுப்பதாக இருந்திருந்தால் இங்கிலாந்து தொடரிலாவது அவர் இடம்பெற்றிருந்திருக்க வேண்டும். ஆனால் அவர் இல்லை.

எனவே டி20 உலக கோப்பைக்கான அணியில் அவருக்கு இடம் இருக்காது. என்னைப் பொறுத்தமட்டில் ரோகித்தும் கே.எல்.ராகுலும் தொடக்க வீரர்களாக இறங்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்