< Back
கிரிக்கெட்
இந்திய அணியின் கேப்டனாக புதிய சாதனை படைத்தார் ஷிகர் தவான்

கோப்புப்படம் 

கிரிக்கெட்

இந்திய அணியின் கேப்டனாக புதிய சாதனை படைத்தார் ஷிகர் தவான்

தினத்தந்தி
|
28 July 2022 10:05 PM IST

வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் ஒயிட்வாஷ் வெற்றியை பதிவு செய்த முதல் இந்திய கேப்டன் என்ற புதிய சாதனையை ஷிகர் தவான் படைத்துள்ளார்

போர்ட் ஆப் ஸ்பெயின்,

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3 மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று குயின்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டி.எல். விதிப்படி 115 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசன் வீழ்த்திய இந்திய அணி, 3-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்தது.

கில் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை தட்டிச் சென்றார். முன்னதாக இந்த தொடரில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி இல்லாத நிலைமையில் ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்தியா அனைத்துப் போட்டிகளிலும் வெற்றியை பதிவு செய்து சாதித்து காட்டியுள்ளது.

அதிலும் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இப்போதுதான் முதல் முறையாக வெஸ்ட் இண்டீசை அதன் சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் வெற்றியை பதிவு செய்து இந்தியா புதிய சாதனையுடன் கோப்பையை வென்றுள்ளது.

மேலும் இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் ஒயிட்வாஷ் வெற்றியை பதிவு செய்த முதல் இந்திய கேப்டன் என்ற புதிய சாதனையை ஷிகர் தவான் படைத்துள்ளார். அந்த பட்டியல்:

1. கங்குலி (2002) : 2 -1 (5) 2 போட்டிகள் மழையால் ரத்து செய்யப்பட்டது.

2. எம்எஸ் டோனி (2009) : 2-1 (4) 1 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.

3. சுரேஷ் ரெய்னா (2011) : 3-2 (5) 4. விராட் கோலி (2017) : 3-1 (5) 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது.

5. விராட் கோலி (2019) : 2-0 (3), 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது

6. ஷிகர் தவான் (2022): 3-0 (3)*

மேலும் கடந்த 2006-க்குப்பின் தொடர்ச்சியாக 12 தொடர்களில் வெஸ்ட் இண்டீசை தோற்கடித்த இந்தியா ஒருநாள் கிரிக்கெட்டில் குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக தொடர்களில் வென்ற அணி என்ற புதிய உலக சாதனையும் படைத்துள்ளது. 2-வது இடம் : பாகிஸ்தான் – ஜிம்பாப்வேக்கு எதிராக (11)

மேலும் செய்திகள்