சி.எஸ்.கே. அணியில் தீபக் சாஹருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர்...காரணம் என்ன..?
|கொல்கத்தாவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் தீபக் சாஹர் அணியில் இடம்பெறவில்லை.
சென்னை,
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் ருதுராஜ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அத்துடன் கடந்த போட்டியில் விளையாடாத வங்காளதேச வீரர் முஸ்தாபிசுர் ரகுமான் இப்போட்டியில் விளையாடுவதாக அறிவித்தார். ஆனால் சென்னை அணியின் பிரதான வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹர் இந்த போட்டியில் களமிறங்கவில்லை என்றும் அவருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் அணியில் சேர்க்கப்படுவதாகவும் கூறினார்.
அதற்கான காரணம் என்னவெனில்: தீபக் சாஹர் லேசான காயத்தால் அவதிப்படுவதால் இன்றைய போட்டியில் களம் இறங்கவில்லை. அதன் காரணமாக ஷர்துல் தாக்கூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
முதலில் பேட்டிங் செய்து வரும் கொல்கத்தா அணி பவர்பிளே முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் அடித்துள்ளது.