< Back
கிரிக்கெட்
ராஜஸ்தானுக்கு எதிராக தோல்வி ஆனாலும் பட்லரை கட்டிப்பிடித்து பாராட்டிய ஷாருக்கான் - வீடியோ

Image Courtesy: Twitter 

கிரிக்கெட்

ராஜஸ்தானுக்கு எதிராக தோல்வி ஆனாலும் பட்லரை கட்டிப்பிடித்து பாராட்டிய ஷாருக்கான் - வீடியோ

தினத்தந்தி
|
17 April 2024 9:00 AM IST

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

கொல்கத்தா,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் குவித்தது. கொல்கத்தா தரப்பில் அதிரடியாக ஆடிய சுனில் நரேன் சதம் (109 ரன்) அடித்து அசத்தினார். ராஜஸ்தான் தரப்பில் அவேஷ் கான், குல்தீப் சென் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து 224 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் அணியில் பட்லர் ஒருபுறம் நிலைத்து நின்று ஆட மறுபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தன. இதில் ஜெய்ஸ்வால் 19 ரன், சாம்சன் 12 ரன், ரியான் பராக் 34 ரன், துருவ் ஜூரெல் 2 ரன், அஸ்வின் 8 ரன், ஹெட்மையர் 0 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய பட்லர் கடைசி ஓவரில் சதம் அடித்ததுடன் அணியை வெற்றி பெறச்செயதார். அவர் 60 பந்தில் 107 ரன்கள் குவித்து இறுதிவரை களத்தில் இருந்தார். இதையடுத்து அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த ஆட்டத்தை கொல்கத்தா அணியின் உரியமையாளர் ஷாருக்கான் நேரில் கண்டு களித்தார்.

இந்நிலையில் ஆட்டம் முடிந்த பின்னர் தங்கள் அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்கள் அணியை தோல்வி பெற செய்த ஜாஸ் பட்லரை கொல்கத்தா அணியின் உரியமையாளர் ஷாருக்கான் கட்டிப்பிடித்து அவருக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.



மேலும் செய்திகள்