அத்துமீறும் ரசிகர்கள்..! சுப்மன் கில் சகோதரி மீது விமர்சனம்.. மகளிர் ஆணையம் எச்சரிக்கை!
|சுப்மன் கில்லின் சகோதரி ஷஹனீல் கில் குறித்து சமூக ஊடகங்களில் தவறான கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.
புதுடெல்லி
இளம் தொடக்க ஆட்டக்காரர் சுப்மான் கில் கிரிக்கெட்டில் மட்டுமின்றி சமூக ஊடகங்களிலும் டிரெண்டிங் தலைப்பாக இருக்கிறார். ஐபிஎல்-2023ல் கில் தனது பேட்டிங் மூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
இந்த் ஐபிஎல் சீசனில் தொடர்ந்து போட்டிகளில் சதம் அடித்தார். இதைத் தொடர்ந்து, சிலர் அவரது சகோதரிக்கு எத்ராக தவறான கருத்துக்களை தெரிவித்தனர். இப்போது டெல்லி மகளிர் ஆணையம் இதுபோன்ற டிரோலர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயாராகி வருகிறது.
ஐபிஎல்-2023 இன் கடைசி லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தியது. கடைசி ஓவரில் ஏற்பட்ட இந்த தோல்வியுடன், நடப்பு சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பயணம் முடிவுக்கு வந்தது. குஜராத்தின் வெற்றியின் பலன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பிளே ஆப் வாய்ப்பு கிடைத்தது. குஜராத் அணி ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தது.
பெங்களூர் பிளே ஆப்பில் இருந்து வெளியேறியவுடன், சமூக ஊடகங்களில் சுப்மான் கில் மற்றும் அவரது சகோதரியை டிரோல் செய்யத் தொடங்கினர். இதில், தங்களை ஆர்சிபி மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் ரசிகர்கள் என வர்ணித்தவர்களும் இடம் பெற்றனர். கில்லின் சகோதரி ஷஹனீல் கில் குறித்து சமூக ஊடகங்களில் தவறான கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. இப்போது டெல்லி மகளிர் ஆணையத்தின் (டிசிடபிள்யூ) தலைவர் ஸ்வாதி மாலிவால் இதுபோன்ற டிரோலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக கூறி உள்ளார்.
சுவாதி மாலிவால் பல டுவீட்களின் ஸ்கிரீன் ஷாட்களைப் பகிர்ந்துள்ளார். கில்லின் சகோதரியை துஷ்பிரயோகம் செய்பவர்களை ஒரு போதும் விட்டுவைக்க முடியாது என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
சுப்மான் கில்லின் சகோதரியை அவமானப்படுத்துவது மிகவும் வெட்கக்கேடானது, முன்னதாக, விராட் கோலியின் மகளை துஷ்பிரயோகம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்தோம். கில்லின் சகோதரியை துஷ்பிரயோகம் செய்தவர்கள் மீது டெல்லி மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என கூறி உள்ளார்
இந்த ஐபிஎல் சீசனில் சுப்மான் கில் ஆரஞ்சு தொப்பிக்கான பந்தயத்தில் நீடிக்கிறார். கில் இதுவரை 14 போட்டிகளில் விளையாடி 2 சதங்கள் மற்றும் 4 அரை சதங்கள் உட்பட 680 ரன்கள் குவித்துள்ளார். அவருக்கு மேலே டுப்ளேசி இருக்கிறார், ஆனால் அவரது அணி பிளேஆப்களில் இல்லை. அத்தகைய சூழ்நிலையில், கில் முன்னேற ஒரு பெரிய வாய்ப்பு உள்ளது. இந்த சீசனில் டுபிளெசி 8 அரை சதங்களின் உதவியுடன் 730 ரன்கள் எடுத்துள்ளார்.