< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
"ஐபிஎல் ஏலத்தில் ஷஹீன் அப்ரிடி இருந்திருந்தால் ரூ.15 கோடிக்கு வாங்கப்பட்டு இருப்பார்"- அஸ்வின்
|28 Aug 2022 7:16 PM IST
ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடி காயம் காரணமாக விலகியுள்ளார்.
துபாய்,
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த தொடரில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடி காயம் காரணமாக விலகியுள்ளார்.
இந்த நிலையில் அவர் குறித்து இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியுள்ளார். அப்ரிடி குறித்து அவர் கூறுகையில் "ஐபிஎல் ஏலத்தில் ஷஹீன் அப்ரிடி இருந்திருந்தால் எவ்வளவு சுவாரசியமாக இருந்திருக்கும் என்று நான் நிறைய யோசித்து இருக்கிறேன். அவர் ஒரு உயரமான இடது கை வேகப்பந்து வீச்சாளர்.
புதிய பந்தைக் (நியூபால்) கொண்டு ஆட்டத்தை சிறப்பாக தொடங்குகிறார். யார்க்கர்களை சிறப்பாக வீசுகிறார்.ஐபிஎல் ஏலத்தில் அவர் இருந்திருந்தால் 14-15 கோடிக்கு போயிருக்கலாம். " என்று அஷ்வின் கூறினார்.