< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
தந்தை ஆனதை விக்கெட் வீழ்த்திய பின் கொண்டாடி வெளிப்படுத்திய ஷாகீன் அப்ரிடி.. வீடியோ வைரல்
|25 Aug 2024 8:01 PM IST
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளரான ஷாகீன் அப்ரிடிக்கு ஆன் குழந்தை பிறந்துள்ளது.
ராவல்பிண்டி,
பாகிஸ்தான் - வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது. இதில் வங்காளதேசம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முன்னதாக இந்த போட்டியில் வங்காளதேசத்தின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஷாகீன் அப்ரிடி ஹசன் மக்முத் விக்கெட்டை வீழ்த்திய போது தனக்கு குழந்தை பிறந்ததை வெளிப்படுத்தும் விதமாக சைகை மூலம் கொண்டாடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
முன்னதாக ஷாகீன் அப்ரிடி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் முன்னாள் கேப்டனான ஷாகித் அப்ரிடியின் மகளான அன்ஷா அப்ரிடியை மணந்தார். இந்த தம்பதிக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்தது.