< Back
கிரிக்கெட்
டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் முதல் பாகிஸ்தான் வீரராக ஷாகின் அப்ரிடி படைக்கவுள்ள சாதனை

Image Courtesy: @TheRealPCB

கிரிக்கெட்

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் முதல் பாகிஸ்தான் வீரராக ஷாகின் அப்ரிடி படைக்கவுள்ள சாதனை

தினத்தந்தி
|
17 Aug 2024 9:14 PM IST

வங்காளதேச கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.

கராச்சி,

ஷாண்டோ தலைமையிலான வங்காளதேச கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி வரும் 21ம் தேதி ராவல்பிண்டியிலும், 2வது போட்டி வரும் 30ம் தேதி கராச்சியிலும் தொடங்க உள்ளது.

இதையடுத்து இந்த தொடரில் சிறப்பாக செயல்பட இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணிக்கு ஷான் மசூத் கேப்டனாகவும், சவுத் சகீல் துணை கேப்டனாகவும் நியமிக்கபட்டுள்ளனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னணி நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஷாகின் அப்ரிடி வங்காளதேச அணிக்கு எதிரான இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் புதிய சாதனை பட்டியல் ஒன்றில் இடம் பிடிக்க உள்ளார்.

அதாவது, நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஒட்டுமொத்தமாகவே சேர்த்து 24 போட்டிகளில் இதுவரை விளையாடியுள்ள ஷாஹீன் அப்ரிடி 91 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்நிலையில், வங்காளதேசத்திற்கு எதிரான தொடரில் மேலும் 9 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் மட்டும் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை அவர் நிகழ்த்துவார்.

ஏற்கனவே இந்த சாதனை பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் நாதன் லையன் 187 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். பேட் கம்மின்ஸ் (175 விக்கெட்டுகள்) 2வது இடத்திலும், ரவிச்சந்திரன் அஸ்வின் (174 விக்கெட்டுகள்) 3வது இடத்திலும் உள்ளனர்.

மேலும் செய்திகள்