< Back
கிரிக்கெட்
சையத் முஷ்டாக் அலி போட்டி: ஷபாஸ் அகமது அதிரடி- தமிழக அணியை வீழ்த்தி பெங்கால் அபார வெற்றி

Image Courtesy: AFP

கிரிக்கெட்

சையத் முஷ்டாக் அலி போட்டி: ஷபாஸ் அகமது அதிரடி- தமிழக அணியை வீழ்த்தி பெங்கால் அபார வெற்றி

தினத்தந்தி
|
16 Oct 2022 11:35 PM IST

ஷபாஸ் அஹமத் 27 பந்துகளில் 42 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

லக்னோ,

15-வது சையத் முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் லக்னோவில் நடந்த 'இ' பிரிவு ஆட்டம் ஒன்றில் தமிழக அணியும், பெங்கால் அணியும் மோதின.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்கால் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷபாஸ் அஹமத் 27 பந்துகளில் 42 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அதை தொடர்ந்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தமிழக அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதன் மூலம் பெங்கால் அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் சார்பில் பேட்டிங்கில் ஜொலித்த ஷபாஷ் அஹமத் பந்துவீச்சிலும் அசத்தினார். 4 ஓவர்கள் வீசிய அவர் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.

மேலும் செய்திகள்