ஷாரூக் கான், சுரேஷ் குமார் அதிரடி; மதுரைக்கு எதிராக கோவை கிங்ஸ் 208 ரன்கள் குவிப்பு..!
|லைக்கா கோவை கிங்ஸ் அணி தரப்பில் சுரேஷ் குமார், ஷாரூக்கான், சச்சின் ஆகியோர் அரைசதம் அடித்து அசத்தினர்.
சென்னை,
டிஎன்பிஎல் தொடரின் இறுதிகட்ட லீக் ஆட்டங்கள் திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை லைக்கா கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் ஆகிய 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன.
எஞ்சிய ஒரு பிளே ஆப் இடத்துக்கு மதுரை பாந்தர்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் ஆகிய அணிகள் போராடி வருகின்றன. பால்சி திருச்சி அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.
இதையடுத்து டிஎன்பிஎல் தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதில் மாலை 3.15 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ், லைக்கா கோவை கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன.
இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து லைக்கா கோவை கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியது.
கோவை அணியின் தொடக்க ஆட்டக்காரகளாக களம் இறங்கிய சுஜய் 4 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து சுரேஷ் குமார் உடன் சச்சின் ஜோடி சேர்ந்தார். இந்த இணை அபாரமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. அதிரடியாக ஆடிய சச்சி அரைசதம் அடித்தார். அவர் 64 ரன்னிலும், இதையடுத்து களம் இறங்கிய முகிலேஷ் 11 ரன்னிலும் அவுட் ஆகினர்.
இதையடுத்து சச்சினுடன் கேப்டன் ஷாரூக் கான் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக ஆடிய ஷாருக் மற்றும் சச்சின் இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். அதிரடியாக ஷாரூக் கான் 53 ரன் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். இறுதியில் லைக்கா கோவை கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 208 ரன்களே சேர்த்தது.
லைக்கா கோவை கிங்ஸ் அணி தரப்பில் சுரேஷ் குமார், சச்சின், ஹாரூக் கான் ஆகிய மூவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதையடுத்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை பாந்தர்ஸ் அணி ஆட உள்ளது.