< Back
கிரிக்கெட்
இலங்கைக்கு எதிரான தொடர்; வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு

கோப்புப்படம்

கிரிக்கெட்

இலங்கைக்கு எதிரான தொடர்; வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு

தினத்தந்தி
|
5 Oct 2024 8:47 AM IST

இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

டிரினிடாட்,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 13ம் தேதி தொடங்க உள்ளது. முதலில் டி20 போட்டிகள் நடைபெற உள்ளன. டி20 போட்டிகள் தம்புல்லாவிலும், ஒருநாள் போட்டிகள் பல்லகலேவிலும் நடைபெற உள்ளன.

இந்நிலையில் இந்த தொடர்களுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் டி20 அணிக்கு ரோவ்மன் பவல் கேப்டனாகவும், ஒருநாள் அணிக்கு ஷாய் ஹோப் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

துணை கேப்டன்களாக ரோஸ்டன் சேஸ் (டி20 அணி), அல்ஜாரி ஜோசப் (ஒருநாள் அணி) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆச்சரியம் அளிக்கும் வகையில் ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டருக்கு இரு அணியிலும் இடம் கிடைக்கவில்லை.

வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி விவரம்: ரோவ்மன் பவல் (கேப்டன்), ரோஸ்டன் சேஸ் (துணை கேப்டன்), பேபியன் ஆலென், அலிக் அத்தானஸ், ஆண்ட்ரே பிளெச்சர், டெரன்ஸ் ஹிண்ட்ஸ், ஷாய் ஹோப், அல்ஜாரி ஜோசப், ஷமர் ஜோசப், பிரண்டன் கிங், எவின் லூயிஸ், குடகேஷ் மோடி, ஷெர்பேன் ரூதர்போர்டு, ரொமாரியோ ஷெப்பர்ட், ஷமர் ஸ்பிரிங்கர்.

வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணி விவரம்: ஷாய் ஹோப் (கேப்டன்), அல்ஜாரி ஜோசப் (துணை கேப்டன்), ஜூவல் ஆண்ட்ரூ, அலிக் அத்தானஸ், கீசி கார்டி, ரோஸ்டன் சேஸ், மத்தேயு போர்டு, ஷமர் ஜோசப், பிரண்டன் கிங், எவின் லூயிஸ், குடகேஷ் மோடி, ஷெர்பேன் ரூதர்போர்டு, ஜெய்டன் சீல்ஸ், ரொமாரியோ ஷெப்பர்ட், ஹைடன் வால்ஷ் ஜூனியர்.



மேலும் செய்திகள்