இலங்கைக்கு எதிரான தொடர்; வங்காளதேச அணி அறிவிப்பு
|அடுத்த மாதம் வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது.
சில்ஹெட்,
இலங்கை கிரிக்கெட் அணி தற்போது ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடர் வரும் 21ம் தேதி நிறைவு பெறுகிறது. இந்த தொடர் நிறைவடைந்த உடன் வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி அங்கு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆட உள்ளது.
இந்த தொடர் அடுத்த மாதம் 4ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இந்த தொடரின் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான அணியை வங்காளதேசம் அறிவித்துள்ளது. இந்த அணிகளுக்கு நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு முதல் 2 போட்டிகளுக்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 3வது போட்டிக்கான அணி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான அணியில் ஷகிப் அல் ஹசன் இடம்பெறவில்லை.
டி20 தொடருக்கான வங்காளதேச அணி விவரம்; நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ (கேப்டன்), லிட்டன் குமார் தாஸ், அனாமுல் ஹக் பிஜோய், எம்.டி நைம் ஷேக், தவ்ஹித் ஹிரிடோய், சவுமியா சர்கார், ஷக் மெஹதி ஹசன், மஹ்மத்துல்லா, தைஜூல் இஸ்லாம், ரிஷாத் ஹொசைன், தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷொரிபுல் இஸ்லாம், தன்சிம் ஹசன் ஷகிப், அலிஸ் அல் இஸ்லாம்.
முதல் இரு ஒருநாள் போட்டிகளுக்கான வங்காளதேச அணி விவரம்; நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ (கேப்டன்), அனாமுல் ஹக் பிஜோய், சவுமியா சர்கார், தன்சித் ஹசன் தமிம், லிட்டன் குமார் தாஸ், முஷ்பிகுர் ரஹீம், தவ்ஹித் ஹிரிடோய், மஹ்மத்துல்லா, மெஹதி ஹசன் மிராஸ், தைஜூல் இஸ்லாம், ரிஷாத் ஹொசைன், தஸ்கின் அகமது, ஷொரிபுல் இஸ்லாம், தன்சிம் ஹசன் ஷகிப், முஸ்தாபிசுர் ரஹ்மான்.