< Back
கிரிக்கெட்
இங்கிலாந்துக்கு எதிரான தொடர்; ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் விலகல்

Image Courtesy: AFP 

கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான தொடர்; ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் விலகல்

தினத்தந்தி
|
28 Sept 2024 11:52 AM IST

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து ஆஸ்திரேலியாவின் கேமரூன் க்ரீன் விலகி உள்ளார்.

மெல்போர்ன்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இதையடுத்து நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் 4 போட்டிகள் நிறைவடைந்துள்ளன.

இதன் முடிவில் இரு அணிகளும் தலா 2 வெற்றி பெற்றுள்ளன. தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது. இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான எஞ்சிய தொடரில் இருந்து ஆஸ்திரேலியாவின் கேமரூன் க்ரீன் விலகி உள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான எஞ்சிய தொடரில் இருந்து ஆஸ்திரேலியாவின் கேமரூன் க்ரீன் விலகி உள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்