< Back
கிரிக்கெட்
வங்காளதேசத்திற்கு எதிரான தொடர்; இலங்கை முன்னணி வேகப்பந்து வீச்சாளர் விலகல் - காரணம் என்ன..?

Image Courtesy: AFP

கிரிக்கெட்

வங்காளதேசத்திற்கு எதிரான தொடர்; இலங்கை முன்னணி வேகப்பந்து வீச்சாளர் விலகல் - காரணம் என்ன..?

தினத்தந்தி
|
17 March 2024 12:04 PM IST

இலங்கை கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

கொழும்பு,

இலங்கை கிரிக்கெட் அணி வங்காள்தேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் முதல் இரு ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்று தொடர் 1-1 என சமனில் உள்ளது. இந்நிலையில் ஒருநாள் தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது.

இந்நிலையில் இலங்கை ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான தில்ஷன் மதுஷன்கா வங்காளதேசத்திற்கு எதிரான எஞ்சிய தொடர்களில் இருந்து விலகி உள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

வங்காளதேசத்திற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியின் போது இடது தொடை தசையில் காயம் ஏற்பட்டதால் பாதியிலேயே வெளியேறிய அவர் காயத்திலிருந்து இன்னும் மீளாததால் எஞ்சிய தொடர்களில் இருந்து விலகி உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்