< Back
கிரிக்கெட்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்: புதிய சாதனையை நெருங்கும் அஷ்வின்...!
கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்: புதிய சாதனையை நெருங்கும் அஷ்வின்...!

தினத்தந்தி
|
7 Feb 2023 3:59 PM IST

4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் ஆட ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்துள்ளது.

புதுடெல்லி,

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய இந்திய வீரர்களின் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ள ஹர்பஜன் சிங்கின் சாதனையை ரவிச்சந்திரன் அஷ்வின் நெருங்க உள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் பட்டியலில் அனில் கும்ப்ளே முதலிடத்தில் இருக்கிறார். அவர் 20 டெஸ்ட் போட்டிகளை ஆடி 111 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இதன் பிறகு இரண்டாவது இடத்தில் ஹர்பஜன்சிங் 18 போட்டிகளில் விளையாடி 95 விக்கெட்களை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வீழ்த்தி இருக்கிறார்.

இந்த பட்டியலில் அஷ்வின் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். 18 டெஸ்ட்களில் களம் இறங்கியுள்ள அஷ்வின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 89 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்.இதன் மூலம் இந்த டெஸ்ட் தொடரில் அஸ்வின் 22 விக்கெட்டுகளை வீழ்த்தினால் அணில் கும்ப்ளேவின் சாதனையை முறியடிக்க முடியும்.

இதேபோன்று ஹர்பஜன் சாதனையை முறியடிக்க ஆறு விக்கெட்டுகள் போதுமானது. மேலும் 100 விக்கெட்டுகளை அஷ்வின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கைப்பற்ற இன்னும் 11 விக்கெட் தேவை. இந்த மூன்று சாதனைகளும் சாத்தியம் என்பதால் அஷ்வின் மிகப்பெரிய ரெக்கார்ட் ஒன்றை படைக்க வாய்ப்பு இருக்கிறது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 9ம் தேதி தொடங்க உள்ளது.

மேலும் செய்திகள்