திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் அணி வீரர், வீராங்கனைகள் தேர்வு
|திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் அணி வீரர், வீராங்கனைகள் தேர்வு அடுத்த மாதம் (ஏப்ரல்) 4 நாட்கள் நடக்கிறது.
சென்னை,
இந்த ஆண்டுக்கான (2023-24) திருவள்ளூர் மாவட்ட பெண்கள் அணிக்கான வீராங்கனைகள் மற்றும் 12, 14, 16, 19 வயதுக்கு உட்பட்ட அணிகளுக்கான வீரர்கள் தேர்வு சென்னை செங்குன்றத்தில் உள்ள கோஜன் வணிகம் மற்றும் தொழில்நுட்ப பள்ளியில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 4 நாட்கள் நடக்கிறது. பெண்கள் அணிக்கான வீராங்கனைகள் தேர்வு ஏப்ரல் 13-ந் தேதி காலை 9 மணிக்கு நடக்கிறது.
அதேநாளில் 12 வயதுக்கு உட்பட்ட அணிக்கான வீரர்கள் தேர்வு காலை 7 மணிக்கு நடைபெறுகிறது. 14 வயதுக்கு உட்பட்ட அணிக்கான வீரர்கள் தேர்வு 14-ந் தேதி காலை 7 மணிக்கும், 16 வயதுக்கு உட்பட்ட அணிக்கான வீரர்கள் தேர்வு 15-ந் தேதி காலை 7 மணிக்கும், 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கான வீரர்கள் தேர்வு 16-ந் தேதி காலை 7 மணிக்கும் நடக்கிறது.
இந்த தேர்வில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பங்களை வருகிற 10-ந் தேதி காலை 10 மணி முதல் டாக்டர் ரவீந்திரன் ஹெல்த்கேர் மையம், 211 எம்.டி.எச்.ரோடு, அம்பத்தூர் ஒ.டி.பஸ்நிலையம், சென்னை-53 என்ற முகவரியில் செயல்படும் திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்க அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்றும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வருகிற 31-ந் தேதி கடைசி நாளாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்ட சேர்ந்த வீரர், வீராங்கனைகள் தகுந்த வயது மற்றும் இருப்பிட சான்றிதழுடன் விண்ணப்பிக்க தகுதி படைத்தவர்கள் என்று திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் கே.முரளி தெரிவித்துள்ளார்.