< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் ஸ்காட் போலண்ட் களம் இறங்குவார்- ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ்
|6 Jun 2023 2:29 PM IST
ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஸ்காட் போலண்ட் ஆடும் லெவனில் இருப்பார் என அந்த அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறியுள்ளார்
லண்டன்,
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஓவலில் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
இதையொட்டி ஒரு வாரத்திற்கு மேலாக இரு அணியினரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பட்டம் வென்று வரலாறு படைக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஸ்காட் போலண்ட் ஆடும் லெவனில் இருப்பார் என அந்த அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறியுள்ளார். 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஸ்காட் போலண்ட் 28 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்