பி.சி.சி.ஐ-யின் மத்திய ஒப்பந்தத்தில் இடம் பிடித்த சர்பராஸ் கான், துருவ் ஜூரெல்
|சர்பராஸ் கான் மற்றும் துருவ் ஜூரெல் ஆகிய இருவரும் பி.சி.சி.ஐ-யின் மத்திய ஒப்பந்தத்தில் இடம் பிடித்துள்ளனர்.
மும்பை,
அண்மையில் நடைபெற்று முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த தொடரில் முதல் டெஸ்டில் தோல்வி கண்ட இந்திய அணி அடுத்த 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி அசத்தியது.
இந்த தொடரில் இந்திய அணியில் இளம் வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், சர்பராஸ் கான், துருவ் ஜூரெல் ஆகியோர் அருமையாக தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில் தற்போது, இந்திய அணியின் இளம் வீரர்களான பேட்ஸ்மேன் சர்பராஸ் கான் மற்றும் விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெல் ஆகியோர் பி.சி.சி.சி.-யின் மத்திய ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். நேற்று நடைபெற்ற பி.சி.சி.ஐ அபெக்ஸ் கவுன்சில் கூட்டத்தின் போது அவர்களை கிரேடு சி-யில் சேர்க்க அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.
2023-24 சீசனுக்கான பி.சி.சி.ஐ மத்திய ஒப்பந்தங்கள் ஏற்கனவே கடந்த மாதம் இறுதி செய்யப்பட்டன. அப்போது அந்த பட்டியலில் இடம் பெறாத சர்பராஸ் கான் மற்றும் துருவ் ஜூரெல் ஆகியோர் நேற்று நடைபெற்ற பி.சி.சி.ஐ அபெக்ஸ் கவுன்சில் கூட்டத்தின் போது மத்திய ஒப்பந்தத்தில் இடம் பெறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
முடிவில் சர்பராஸ் கான் மற்றும் துருவ் ஜூரெல் ஆகிய இருவரையும் பி.சி.சி.ஐ-யின் மத்திய ஒப்பந்தத்தில் கிரேடு-சி-யில் சேர்ப்பது என முடிவு எடுக்கப்பட்டது. இதன் மூலம் அவர்களுக்கு வருடத்திற்கு ரூ. 1 கோடி பி.சி.சி.சி -யை கட்டணம் கிடைக்கும்.
கிரேடு ஏ+: ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பப்ரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா
கிரேடு ஏ: ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, முகமது சிராஜ், கே.எல். ராகுல், சுப்மன் கில், ஹர்திக் பாண்ட்யா
கிரேடு பி: சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், குல்தீப் யாதவ், அக்சர் படேல், யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
கிரேடு சி: ரிங்கு சிங், திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட், ஷர்துல் தாக்கூர், ஷிவம் துபே, ரவி பிஷ்னோய், ஜிதேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், கே.எஸ்.பரத், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான், ரஜத் படிதார், சர்பராஸ் கான், துருவ் ஜூரல்.
வேகப்பந்து வீச்சு ஒப்பந்தங்கள்: ஆகாஷ் தீப், விஜய்குமார் வைஷாக், உம்ரான் மாலிக், யாஷ் தயாள், வித்வத் கவேரப்பா.