< Back
கிரிக்கெட்
காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து சஞ்சு சாம்சன் விலகல்; ஜிதேஷ் சர்மா சேர்ப்பு
கிரிக்கெட்

காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து சஞ்சு சாம்சன் விலகல்; ஜிதேஷ் சர்மா சேர்ப்பு

தினத்தந்தி
|
6 Jan 2023 3:38 AM IST

இலங்கைக்கு எதிரான எஞ்சிய இரண்டு 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து சஞ்சு சாம்சன் நேற்று விலகினார்.

புனே,

மும்பையில் நடந்த இலங்கைக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் எல்லைக்கோடு அருகே பந்தை பிடிக்க பாய்ந்து விழுந்த போது இந்திய வீரர் சஞ்சு சாம்சனுக்கு இடது முழங்காலில் காயம் ஏற்பட்டது. இந்த காயத்துக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. அத்துடன் ஓய்வு எடுத்து காயத்தில் இருந்து மீண்டு வருவதற்கான பயிற்சிகளை மேற்கொள்ளும்படி சஞ்சு சாம்சனுக்கு இந்திய கிரிக்கெட் வாரிய மருத்துவ குழுவினர் அறிவுரை வழங்கினர்.

இதையடுத்து இலங்கைக்கு எதிரான எஞ்சிய இரண்டு 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து சஞ்சு சாம்சன் நேற்று விலகினார். அவருக்கு பதிலாக மராட்டியத்தை சேர்ந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான ஜிதேஷ் சர்மா தேர்வு செய்யப்பட்டார். 29 வயதான ஜிதேஷ் சர்மா கடந்த ஐ.பி.எல்.போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஆடுகையில் சிறப்பாக செயல்பட்டதால் முதல்முறையாக இந்திய அணிக்கு அழைக்கப்பட்டு இருக்கிறார். உடனடியாக புனேயில் உள்ள இந்திய அணியினருடன் அவர் இணைந்தார்.

மேலும் செய்திகள்