< Back
கிரிக்கெட்
ரிஷப் பண்ட் குணமடைய வேண்டி, ஒடிசாவில் மணற்சிற்பம்...!
கிரிக்கெட்

ரிஷப் பண்ட் குணமடைய வேண்டி, ஒடிசாவில் மணற்சிற்பம்...!

தினத்தந்தி
|
31 Dec 2022 1:52 AM IST

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் சென்ற கார் சாலையின் நடுவே உள்ள டிவைடரில் மோதி தீப்பிடித்து விபத்துக்குள்ளானது.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப்பண்ட், இன்று காலை டெல்லியில் இருந்து சொகுசு காரில் உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் உள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டி சென்றார். டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் மங்க்ரூர் பகுதி அருகே திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலை தடுப்பில் மோதியது.

இந்த விபத்தில் ரிஷப்பண்ட் படுகாயம் அடைந்தார். அவரது தலை, முதுகு, கால் ஆகியவற்றில் காயம் ஏற்பட்டது. தற்போது டேராடூனில் உள்ள மேக்ஸ் ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். ரிஷப்பண்ட் உடல்நிலை சீராக உள்ளது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரிஷப் பண்ட் விரைந்து குணமடைய வேண்டி, ஒடிசாவின் மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஒடிசாவின் பூரி கடற்கரையில் மணல் சிற்பத்தை உருவாக்கி உள்ளார். அதில் கிரிக்கெட் மட்டையில் ரிஷப் பண்ட் உருவம் மற்றும் 'விரைவில் குணமடையுங்கள் ரிஷப் பண்ட்' (Get Well soon Rishabh pant) என எழுதியுள்ளார்.

இந்த மணல் சிற்பத்தை சுதர்சன் பட்நாயக் தனது டுவிட்டர் பதிவில் புகைபடத்துடன் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்