< Back
கிரிக்கெட்
ஜாம்பவான்கள் கங்குலி, யுவராஜ் வரிசையில் தனித்துவ சாதனை பட்டியலில் இணைந்த சாம் கர்ரண்
கிரிக்கெட்

ஜாம்பவான்கள் கங்குலி, யுவராஜ் வரிசையில் தனித்துவ சாதனை பட்டியலில் இணைந்த சாம் கர்ரண்

தினத்தந்தி
|
16 May 2024 5:43 PM IST

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சாம் கர்ரண் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

கவுகாத்தி,

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் வெற்றி பெற்றது.

அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் மட்டுமே அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரியான் பராக் 48 ரன்கள் அடித்தார். ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சாம் கர்ரண், ஹர்ஷல் படேல் மற்றும் ராகுல் சஹார் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் 18.5 ஓவர்களிலேயே இலக்கை கடந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் சாம் கர்ரண் 63 ரன்கள் குவித்தார். இந்த போட்டியில் பேட்டிங் மட்டுமின்றி பவுலிங்கிலும் அசத்திய சாம் கர்ரண் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த போட்டியில் சாம் கர்ரண் 2 விக்கெட்டுகள் மற்றும் 63 ரன்கள் குவித்தார். இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு போட்டியில் 50+ ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகள் வீழ்த்திய கேப்டன் என்ற தனித்துவ சாதனை பட்டியலில் கங்குலி, யுவாராஜ் வரிசையில் இணைந்துள்ளார்.

அந்த பட்டியல்:

சவுரவ் கங்குலி - 91 ரன்கள் & 2 விக்கெட்டுகள்

யுவராஜ் சிங் ( 2 முறை) - 50 ரன்கள் & 3 விக்கெட்டுகள் மற்றும் 66 ரன்கள் & 4 விக்கெட்டுகள்

ஜேபி டுமினி - 54 ரன்கள் & 4 விக்கெட்டுகள்

சாம் கர்ரண் - 63 ரன்கள் & 2 விக்கெட்டுகள்

மேலும் செய்திகள்