< Back
கிரிக்கெட்
மீண்டும் சர்ரே கவுன்ட்டி அணியில்  சாய் சுதர்சன்
கிரிக்கெட்

மீண்டும் சர்ரே கவுன்ட்டி அணியில் சாய் சுதர்சன்

தினத்தந்தி
|
26 Jun 2024 7:27 AM IST

சாய் சுதர்சன் கடந்த சீசனில் கவுன்ட்டி சாம்பியன்ஷிப்பில் சர்ரே அணிக்காக விளையாடினார்.

சென்னை,

இந்தியாவின் இடது கை பேட்ஸ்மேனும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான சாய் சுதர்சன் கடந்த சீசனில் கவுன்ட்டி சாம்பியன்ஷிப்பில் சர்ரே அணிக்காக விளையாடினார். இரண்டு போட்டிகளில் விளையாடி 116 ரன்கள் அடித்தார். அதில் ஒரு அரைசதம் ஆகும். இது அந்த அணி 22-வது முறை சாம்பியன் பட்டம் வெல்ல உதவியாக இருந்தது.

இந்த நிலையில் , சாய் சுதர்சன் மீண்டும் சர்ரே அணிக்காக இந்த சீசனில் சில போட்டிகளில் விளையாடுவார் என சர்ரே அணி தெரிவித்துள்ளது.சென்னையை சேர்ந்த சாய் சுதர்சன் ஐபிஎல் கிரிக்கெட்டில் குஜராத் அணிக்காக விளையாடி வருகிறார். 2024 சீசனில் 527 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்