< Back
கிரிக்கெட்
சாய் கிஷோர் அபார பந்துவீச்சு: பஞ்சாப் அணியை 142 ரன்களில் சுருட்டி அசத்தல்

image courtesy: twitter/@gujarat_titans

கிரிக்கெட்

சாய் கிஷோர் அபார பந்துவீச்சு: பஞ்சாப் அணியை 142 ரன்களில் சுருட்டி அசத்தல்

தினத்தந்தி
|
21 April 2024 9:21 PM IST

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் 2-வது ஆட்டத்தில் பஞ்சாப் - குஜராத் அணிகள் விளையாடி வருகின்றன.

சண்டிகர்,

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் 2-வது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கர்ரண் பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான சாம் கர்ரண் - பிரப்சிம்ரன் சிங் ஒரளவு நல்ல தொடக்கம் கொடுத்தனர். இருவரும் ஆட்டமிழந்த பின் அணியின் நிலைமை தலைகீழ் ஆனது.

குஜராத் அணியின் சுழற்பந்து வீச்சில் சிக்கி பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை தாரை வார்த்தனர். அதிலும் குறிப்பாக சாய் கிஷோர் சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

கடைசி கட்டத்தில் ஹர்பிரீத் ப்ரார் மற்றும் ஹர்பிரித் பாட்டியா அதிரடியாக விளையாடி அணி கவுரமான ரன்களை எட்ட உதவினார். இதில் ப்ரார் 12 பந்துகளில் 29 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.

பஞ்சாப் 20 ஓவர்கள் முடிவில் 142 ரன்களில் ஆல் அவுட் ஆனது. கடைசி பந்தில் பாட்டியா ரன் அவுட் ஆனார். அந்த அணியில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 35 ரன்கள் அடித்தார். குஜராத் தரப்பில் அதிகபட்சமாக சாய் கிஷோர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

மேலும் செய்திகள்