< Back
கிரிக்கெட்
ஒய்வை அறிவித்த ரோஜர் பெடரருக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து
கிரிக்கெட்

ஒய்வை அறிவித்த ரோஜர் பெடரருக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து

தினத்தந்தி
|
15 Sept 2022 11:28 PM IST

ஒய்வை அறிவித்த ரோஜர் பெடரருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மும்பை,

சர்வதேச டென்னிஸ் போட்டியிலிருந்து சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். 41 வயதான ரோஜர் பெடரர், 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற முதல் வீரர் என்ற பெருமையை பெற்றவர். பாரம்பரியமிக்க விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை அதிக முறை வென்ற சாதனை படைத்தவர் ரோஜர் பெடரர்.

தரவரிசையில் 310 வாரங்கள் நம்பர் ஒன் இடத்தை பிடித்தவர் என்ற சாதனைக்கும் ரோஜர் பெடரர் சொந்தக்காரர் ஆவார். இந்த சூழலில் 2022 லேவர் கோப்பை தொடருக்கு பின் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் ரோஜர் பெடரருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "என்ன ஒரு அர்பணிப்பு, ரோஜர் பெடரர்.. உங்கள் டென்னிஸ் பிராண்டை நாங்கள் காதலித்தோம். மெல்ல மெல்ல உங்கள் டென்னிஸ் பழக்கமாகிவிட்டது. மேலும் பழக்கவழக்கங்கள் ஒருபோதும் விலகாது, அவை நம்மில் ஒரு பகுதியாக மாறும். அனைத்து அற்புதமான நினைவுகளுக்கும் நன்றி" என்று அதில் சச்சின் டெண்டுல்கர் பதிவிட்டுள்ளார்.


மேலும் செய்திகள்