< Back
கிரிக்கெட்
சுப்மன் கில்லை பாராட்டி பதிவிட்ட சச்சின்
கிரிக்கெட்

சுப்மன் கில்லை பாராட்டி பதிவிட்ட சச்சின்

தினத்தந்தி
|
4 Feb 2024 6:37 PM IST

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் சுப்மன் கில் சதம் அடித்து அசத்தினார்.

மும்பை,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 396 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 253 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

பின்னர் 143 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி சுப்மன் கில் சதத்தின் உதவியுடன் 255 ரன்கள் அடித்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 399 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது இந்தியா.

இந்த போட்டியின் 2-வது இன்னிங்சில் நெருக்கடியில் சிக்கித்தவித்த இந்திய அணியை சுப்மன் கில் சதமடித்து மீட்டெடுத்தார். இந்நிலையில் இதற்கு பாராட்டு தெரிவித்து இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், 'சுப்மன் கில்லின் இந்த இன்னிங்ஸ் திறமை நிறைந்தது! சரியான நேரத்தில் 100 அடித்ததற்கு வாழ்த்துகள்!' என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்