< Back
கிரிக்கெட்
சச்சின், விராட் இல்லை... அவர்தான் இந்திய கிரிக்கெட்டின் உண்மையான பேட்டிங் டான் - பாக். முன்னாள் வீரர் புகழாரம்

கோப்புப்படம்

கிரிக்கெட்

சச்சின், விராட் இல்லை... அவர்தான் இந்திய கிரிக்கெட்டின் உண்மையான 'பேட்டிங் டான்' - பாக். முன்னாள் வீரர் புகழாரம்

தினத்தந்தி
|
11 July 2024 8:30 AM IST

இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் தனது 75-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.

கராச்சி,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான சுனில் கவாஸ்கர், தனது 75-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அவருக்கு முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

அவர் விளையாடிய காலகட்டங்களில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக செயல்பட்டு நிறைய வெற்றிகளில் பங்காற்றினார். தமக்கு சுனில் கவாஸ்கர்தான் ரோல் மாடல் என்று சச்சின் டெண்டுல்கர் பலமுறை தெரிவித்துள்ளார். அந்த வகையில் தற்போது வர்ணனையாளராக செயல்பட்டு வரும் கவாஸ்கருக்கு சச்சின் உட்பட பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் சுனில் கவாஸ்கர்தான் இந்திய கிரிக்கெட்டின் உண்மையான பேட்டிங் டான் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஜாஹிர் அப்பாஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-"தற்போது நீங்கள் 75 வயதை முடித்துள்ளீர்கள். இது உங்களுடைய வாழ்க்கையின் அற்புதமான இன்னிங்ஸ். உங்களுடைய பேட்டிங் போலவே போட்டியை பற்றிய உங்களின் நுணுக்கமான பார்வைகளும் விலைமதிப்பற்றது. சுனில் கவாஸ்கர்தான் இந்திய கிரிக்கெட்டின் ஒரிஜினல் பேட்டிங் டான். அவர் பேட்டிங் செய்வதை நெருக்கமாக பார்த்து நானும் நிறைய கற்றுள்ளேன். கவாஸ்கரை ரோல் மாடலாக வைத்துதான் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி போன்ற மகத்தான பேட்ஸ்மேன்களை இந்தியா உருவாக்கி வருகிறது" என்று கூறினார்.

மேலும் செய்திகள்