ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற ஜோகோவிச்சுக்கு சச்சின் வாழ்த்து
|பாரீஸ் ஒலிம்பிக் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் தங்கப்பதக்கம் வென்றார்.
மும்பை,
பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் அல்காரசை வீழ்த்தி ஜோகோவிச் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.
இந்நிலையில் ஜோகோவிச்சுக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் பக்கத்தில், "ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்று நன்றாக முடித்துள்ளீர்கள் ஜோகோவிச். அல்காரஸ் ஒரு வலுவான போட்டியை வெளிப்படுத்தினார், அவருக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது, ஆனால் ஜோகோவிச் சர்வீஸ் செய்யும் போதெல்லாம் அல்காரசிடம் தடுமாற்றம் இருந்தது. அதுவே ஜோகோவிச்சின் வெற்றிக்குக் காரணம் என்பது என் கருத்து. அல்கராஸ் டென்னிஸ் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்த, அவர் தனது சர்வீசில் முன்னேற்றம் காண வேண்டும்!" என்று பதிவிட்டுள்ளார்.