< Back
கிரிக்கெட்
எஸ்.ஏ.20 ஓவர் லீக் கிரிக்கெட்: ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அரைஇறுதிக்கு தகுதி

image courtesy: Betway SA20 twitter

கிரிக்கெட்

எஸ்.ஏ.20 ஓவர் லீக் கிரிக்கெட்: ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அரைஇறுதிக்கு தகுதி

தினத்தந்தி
|
7 Feb 2023 1:47 AM IST

நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்-சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் மோதின.

ஜோகன்னஸ்பர்க்,

6 அணிகள் பங்கேற்றுள்ள எஸ்.ஏ.20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்-சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் மோதின.

'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட்டுக்கு 160 ரன்கள் சேர்த்தது. கேப்டன் பாப் டுபிளிஸ்சிஸ் 92 ரன்கள் விளாசினார். பின்னர் ஆடிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 136 ரன்களே எடுக்க முடிந்தது.

இதனால் சூப்பர் கிங்ஸ் 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 9-வது ஆட்டத்தில் ஆடிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 5 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லை என்று 22 புள்ளிகளுடன் அரைஇறுதியை உறுதி செய்தது.

தொடர்ந்து நேற்று நடைபெற்ற போட்டியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்-எம்.ஐ கேப் டவுண் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற எம்.ஐ கேப் டவுண் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து களமிறங்கிய எம்.ஐ கேப் டவுண் அணி 17.5 ஓவர்கள் முடிவில் 113 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆல் அவுட்டானது. இதையடுத்து ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேலும் செய்திகள்