< Back
கிரிக்கெட்
எஸ்.ஏ.20 ஓவர் லீக்; சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய சூப்பர் கிங்ஸ்

Image Courtesy: @JSKSA20

கிரிக்கெட்

எஸ்.ஏ.20 ஓவர் லீக்; சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய சூப்பர் கிங்ஸ்

தினத்தந்தி
|
4 Feb 2024 8:36 AM IST

எஸ்.ஏ.20 ஓவர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் - ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

ஜோகன்ஸ்பர்க்,

தென் ஆப்பிரிக்கா 20 ஓவர் லீக் (எஸ்.ஏ. 20 ஓவர் லீக்) கிரிக்கெட் தொடரின் 2வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் - ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது. சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி தரப்பில் ஸ்மட்ஸ் 55 ரன், வியான் முல்டர் 59 ரன் எடுத்தனர். சூப்பர் கிங்ஸ் தரப்பில் வில்லியம்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 204 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சூப்பர் கிங்ஸ் அணி 19.5 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 209 ரன் எடுத்து திரில் வெற்றி பெற்றது. சூப்பர் கிங்ஸ் தரப்பில் டு பிளெஸ்சிஸ் மற்றும் டியு பிளாய் ஆகியோர் தலா 57 ரன் எடுத்தனர். டர்பன் அணி தரப்பில் நூர் அகமது 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. சூப்பர் கிங்ஸ் அணியுடன் டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப், பார்ல் ராயல்ஸ் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

மேலும் செய்திகள்