< Back
கிரிக்கெட்
எஸ்.ஏ. 20 ஓவர் லீக்; பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஈஸ்டன் கேப் அபார வெற்றி

image courtesy; twitter/ @TheHockeyIndia@SA20_League

கிரிக்கெட்

எஸ்.ஏ. 20 ஓவர் லீக்; பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஈஸ்டன் கேப் அபார வெற்றி

தினத்தந்தி
|
23 Jan 2024 2:47 AM GMT

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் 52 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

பார்ல்,

தென் ஆப்பிரிக்காவில் 'எஸ்.ஏ.20' கிரிக்கெட் லீக் போட்டி கடந்த ஆண்டு அறிமுகம் ஆனது. ஐ.பி.எல். பாணியில் நடத்தப்படும் இந்த போட்டி தொடரின் முதலாவது சீசனில் சன்ரைசர்ஸ் ஈஸ்டன் கேப் அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

இந்த தொடரில் நேற்று நடைபெற்ற 15-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சன்ரைசர்ஸ் ஈஸ்டன் கேப் மற்றும் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்களின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

வெறும் 13.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் 52 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. எஸ்.ஏ. 20 ஓவர் லீக் வரலாற்றில் ஒரு அணியின் குறைந்தபட்ச ஸ்கோராக இது பதிவாகியுள்ளது. அந்த அணியில் சால்ட் மற்றும் வில் ஜாக்ஸ் தவிர மற்ற வீரர்கள் யாரும் இரட்டை இலக்கத்தை கூட தொடவில்லை. சன்ரைசர்ஸ் அணியில் அதிகபட்சமாக ஒட்னியல் பார்ட்மேன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இதனையடுத்து 53 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் 6.5 ஓவர்களிலேயே 1 விக்கெட்டை மட்டுமே இழந்து இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.

மேலும் செய்திகள்