< Back
கிரிக்கெட்
எஸ்.ஏ 20 ஓவர் லீக்; பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி பார்ல் ராயல்ஸ் வெற்றி..!

Image Courtesy: @SA20_League

கிரிக்கெட்

எஸ்.ஏ 20 ஓவர் லீக்; பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி பார்ல் ராயல்ஸ் வெற்றி..!

தினத்தந்தி
|
13 Jan 2024 8:01 AM IST

ஐ.பி.எல். பாணியில் நடத்தப்படும் இந்த போட்டியின் முதலாவது சீசனில் சன்ரைசர்ஸ் ஈஸ்டன் கேப் அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

பார்ல்,

தென்ஆப்பிரிக்காவில் 'எஸ்.ஏ.20' கிரிக்கெட் லீக் போட்டி கடந்த ஆண்டு அறிமுகம் ஆனது. ஐ.பி.எல். பாணியில் நடத்தப்படும் இந்த போட்டியின் முதலாவது சீசனில் சன்ரைசர்ஸ் ஈஸ்டன் கேப் அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

இந்த நிலையில் 2-வது எஸ்.ஏ 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி கடந்த 10ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மில்லர் தலைமையிலான பார்ல் ராயல்ஸ் அணி, நீஷம் தலைமையிலான பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொண்டது.

இதில் முதலில் பேட்டிங் செய்த பார்ல் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் எடுத்தது. பார்ல் ராயல்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக மில்லர் 41 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் 27 ரன் வித்தியாசத்தில் பார்ல் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் தரப்பில் பில் சால்ட் 39 ரன்கள் எடுத்தார். பார்ல் ராயல்ஸ் தரப்பில் பெக்லுக்வோயா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

மேலும் செய்திகள்